Saturday, 2 February 2013

காதல் பயணம் முடிவில வானம்....



சிப்பியில் ஒழிந்த முத்தை போல் என் காதல் என்னுள் ஒளிந்து இருந்தது....
 காதலை சொல்ல முற்படும்போதெல்லாம் ஏனோ
சின்ன தயக்கம்....
சின்ன பயம்.......
சின்ன மௌனம்... என்னுள் ஏற்பட்டது.
 உன் கண்களை காணும் போது என் எதிர்காலத்தை பார்த்தது போல் என்னுள் ஓர் எண்ணம்....
 உன் புன்னகையில் என் வார்த்தைகளை தொலைத்தேன்...
உன் மௌனத்தில் என் வலிகளை மறந்தேன்...
உன் பாசத்தில் என் உறவை மறந்தேன்...
 உன் ஸ்பரிசத்தில் என்னையே நான் மறந்தேனடா ....
 நட்பாய் ஆரம்பித்த நம் உறவு என்றோ என்னுள் காதலாகி இன்று உன் முகவரியில் என் பெயரை உன்னுடன் இணைத்து விட்டது.....  உன் கைவிரல் பிடிக்க தோணும் இந்த காதல் பயணம் முடிவில வானம்...

No comments:

Post a Comment